வால்பாறை: வால்பாறையில் நடந்த பிரதோஷபூஜையில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தில், காசிவிஸ்வநாதர் சன்னதி உள்ளது. ஆவணி மாதத்தில் நடந்த முதல் பிரதோஷ பூஜையின் போது, சிவலிங்கத்திற்கு சந்தனம், திருநீரு, இளநீர், பால், தயிர், மஞ்சள் உள்ளிட்ட 16 வகையான அபிேஷக பூஜைகள் இடம்பெற்றன. மாலையில், சிறப்பு அலங்காரத்தில் காசிவிஸ்வநாதர் தேவியருடன் ரிஷபவாகனத்தில் எழுந்தருளி, கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பிரதோஷ பூஜையில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.