நபிகள் நாயகத்தின் அருள் மொழிகள் சிலவற்றைக் கேளுங்கள். வட்டி எவ்வளவு தான் வருமானத்தை பெருக்கினாலும், அதன் முடிவு குறைந்து ÷ பாகக்கூடியதே. வட்டி வாங்கி அதனை உண்ணச் செய்பவன், அதன் கணக்கை எழுதுபவன், அதன் சாட்சியாளன் அனைவரும் பாவத்தில் சமமானவர்கள். சிறிய தந்தை(தந்தையுடன் பிறந்தவர்) சிறிய தாய் (தாயுடன் பிறந்தவர்) இருவரும் பெற்ற தாய், தந்தைக்கு நிகரானவர்கள். வயது வந்த பெண் மக்களுக்கு திருமணம் செய்து வைப்பதில் விரைந்து கொள்ளுங்கள். வயதும், காலமும் வீணாகும் முன் நன்மையான செயல்களைச் செய்வதிலும் விரைந்து கொள்ளுங்கள். உங்களுக்கிடையே ஏற்படும் சண்டை சச்சரவுகளை சமாதானம் மூலம் தீர்த்துகொள்வதில் விரைந்து கொள்ளுங்கள். வாங்கிய கடனைத் திருப்பித் தருவதில் முந்திக் கொள்ளுங்கள்.