நான் படிக்கப் போகிறேன். அடுத்த ஆண்டு நான் உங்களைச் சந்திப்பேன். உங்களால் எனக்குப் பணஉதவி செய்ய முடியுமா? என்று நன்றாகப் படிக்கும் ஒரு மாணவர் உங்களிடம் உதவி கேட்பதாக வைத்துக் கொள்வோமே! அப்போது நீங்கள் இன்ஷா அல்லாஹ் என்று சொல்லுங்கள். இந்தச் சொல்லுக்கு அல்லாஹ் விரும்பினால் என்று அர்த்தம். ஆம்... இறைவனின் விருப்பமில்லாமல் எதுவும் நடக்காது. உதவி கேட்பவரும், உதவி செய் பவரும் அதுவரையில் உயிருடன் இருக்க வேண்டும். அப்படியே இருந்தாலும், இன்று செல்வச் செழிப்புடன் இருக்கும் உதவியாளர் நாளையே செல்வத்தை இழக்கலாம். ஆக, எது நடந்தாலும் இறைவனின் விருப்பப்படியே நடக்கிறது. எனவே, இறைவனின் விருப்பப்படி ஆகட்டும் என்று சொல்லுங்கள். அந்த விருப்பம் நிறைவேற வேண்டும் என்று வேண்டுங்கள்.