வால்பாறை: வால்பாறை ஐயப்பசுவாமி கோவிலில், ஸ்ரீநாராயணகுரு அவதரித்த நாளையொட்டி சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. வால்பாறை வாழைத்தோட்டம் ஐயப்பசுவாமி கோவில் சன்னதியில் துர்க்கை அம்மன், மகாவிஷ்ணு, நாகதெய்வம் ஆகியோருக்கு தனித்தனி சன்னதிகள் கட்டப்பட்டுள்ளன. இந்த கோவிலில் கேரளாவில் ஆன்மிகத்தில் சமத்துவ சாதனைபடைத்த ஸ்ரீநாராயணகுருவுக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது. ஆண்டு தோறும் ஓணம் பண்டிகை முடிந்த பின்னர், மூன்றாவது நாளில் இவரது பிறந்த நாள் கோவில் வளாகத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது. வால்பாறை எஸ்.என்.டி.பி., சார்பில் கோவிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது.