பதிவு செய்த நாள்
20
ஜூலை
2011
12:07
மோகனூர்: ராஜநாகலட்சுமி அம்மன் கோவிலில், 10ம் ஆண்டு வளைகாப்பு திருவிழா ஆகஸ்ட் 4ம் தேதி துவங்குகிறது.மோகனூர், ராசிபாளையம் மாருதி நகரில் பிரசித்தி பெற்ற ராஜநாகலட்சுமி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டு தோறும், ஆடி மூன்றாவது வெள்ளிக்கிழமை, வளைகாப்பு திருவிழா கொண்டாடப்படும்.இந்த ஆண்டு கருட பஞ்சமி, நாக பஞ்சமி ஹோமம் பெருவிழா மற்றும் 10ம் ஆண்டு வளைகாப்பு திருவிழா ஆகஸ்ட் 5ம் தேதி நடக்கிறது. ஆகஸ்ட் 4ம் தேதி காலை 6 மணிக்கு காவிரி ஆற்றுக்கு சென்று தீர்த்தம் எடுத்து வரும் நிகழ்ச்சியுடன் விழா துவங்குகிறது.தொடர்ந்து, காலை 7 மணிக்கு ஸ்தல புண்ணியவானும், கோ பூஜை, 8 மணிக்கு பிரம்மச்சாரி, சுமங்கிலி மற்றும் கன்னிகா பூஜையும், 9 மணிக்கு ஹோமங்கள் ஆரம்பமாகிறது. பகல் 12 மணிக்கு ஸ்வாமிக்கு அபிஷேகம், மகா தீபாராதனை நடக்கிறது. பகல் ஒரு மணிக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. 5ம் தேதி காலை 6 மணிக்கு அபிஷேகம், அலங்காரம் நடக்கிறது. 9 மணிக்கு வளைகாப்பு திருவிழா, மகா தீபாராதனையும், பகல் 1.30 மணிக்கு அன்னதானமும் நடக்கிறது. கருட பஞ்சமி, நாக பஞ்சாமி ஹோமத்திருவிழாவில், யாக பூஜைகள், கணபதி, நவக்கிரஹ ஹோமம், மும்மூர்த்தி சிவன், விஷ்ணு, பிரம்மா ஹோமம், முப்பெருந்தேவியான துர்க்கா, லட்சுமி, சரஸ்வதி ஹோமம், கருப்பண்ணஸ்வாமி ஹோமம் நடக்கிறது.இதற்கான ஏற்பாடுகளை ராஜநாகலட்சுமி அம்மன் அறங்காவலர் குழு நிர்வாகிகள், உறுப்பினர்கள், ஊர் மக்கள் செய்கின்றனர்.