பதிவு செய்த நாள்
02
செப்
2015
12:09
உளுந்தூர்பேட்டை : பாண்டூர் கிராமத்தில் ஸ்ரீபிடாரிசெல்லியம்மன் சுவாமி கோவில் தீமிதி திருவிழா துவங்கியது. உளுந்தூர்பேட்டை தாலுகா, பாண்டூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீபிடாரிசெல்லியப்மன் கோவில் தீமிதி திருவிழா துவங்கியது. முன்னதாக கடந்த 17ம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து 24ம் தேதி ஏரி கோவிலில் இருந்து பிடாரிசெல்லியம்மன் அழைத்து வரப்பட்டது. பின், 7 நாட்கள் தினசரி இரவு நேரங்களில் முருகன், விநாயகர், மாரியம்மன், அய்யனார், செல்லியப்மன் சுவாமிகள் வீதியுலா நடந்தது.நேற்று முன்தினம் இரவு 11:00 மணிக்கு 80 அடி உயரத்தில், மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட மகமேர், வீதியுலா நடந்தது. பாண்டூர், அங்கனூர், பு.கொணலவாடி, உளுந்தூர்பேட்டை, களமருதூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து, இன்று மாலை 5:00 மணிக்கு தீமிதி திருவிழா நடக்கிறது.