பதிவு செய்த நாள்
05
செப்
2015
12:09
அவிநாசி: சேவூரில் பெருமாள் கோவில் திருப்பணி, பக்தர்களின் தொடர் முயற்சியால் தீவிரமடைந்துள்ளது.அவிநாசி அடுத்த சேவூரில், கல்யாண வெங்கட்ரமண பெருமாள் கோவில் உள்ளது.
கி.பி., 13ம் நூற்றாண்டை சேர்ந்த, பழமையான இக்கோவிலின் அர்த்த மண்டப உத்திரத்தில் (மேற்கூரை) இருந்த தூண்கள், 2004ல் கீழே விழுந்தன. அதன்பின், பாலாலய பூஜை செய்யப்பட்டு, கோவில் முன்புறமுள்ள இடத்தில், தினமும் பூஜை நடத்தப்படுகிறது.அதன்பின், திருப்பணி துவக்கப்பட்டது. மூலவ கோபுரம் மட்டும் உடனடியாக சீரமைக்கப்பட்டு வர்ணம் பூசப்பட்டது.
மற்ற பணிகள் மெதுவாக நடந்தன. சேவூர் பக்தர்களின் தொடர் முயற்சியால், கடந்த சில மாதங்களாக, திருப்பணி சற்று வேகமெடுத்துள்ளது. நன்கொடையாளர் வாயிலாக, கல்கார திருப்பணி நடந்து வருகின்றன.பக்தர்கள் கூறுகையில், "11 ஆண்டுகளுக்கு பின், தற்போது திருப்பணி நடந்து வருகிறது. கற்கோவிலாக கட்டப்படுவதால், தாமதமாகிறது; விரைந்து முடிக்க முயற்சித்து வருகிறோம், என்றனர்.