அவலூர்பேட்டை: மேல்மலையனூர் ஒன்றியம், கன்னலம் செல்வ முருகன் கோவிலில் ஆவணி மாத கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. வள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது.பிற்பகலில் அன்னதானம் வழங்கப்பட்டது.
இதே போல் வளத்தி சக்தி முருகன் கோவிலில், வள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. இதில் திரளான மக்கள் கலந்து கொண்டனர்.