திருமாலின் சக்கராயுதத்தையே சக்கரத்தாழ்வார் என்னும் பெயரில் வழிபடுகிறோம். இவரை சுதர்சனம் என்று குறிப்பிடுவர். இதற்கு நல்ல காட்சி என்று பொருள். நினைத்தது விரைவில் நிறைவேற சனிக்கிழமையில் 12 முறை வலம் வந்து இவரை வழிபடுவர். துளசி மாலை சாத்தி, நெய் தீபமேற்றி கல்கண்டு நைவேத்யம் செய்வது சிறப்பு.