கதிர் என்றால் ‘ஒளிக்கற்றை. சிவனின் நெற்றியிலிருந்து ஒளிக் கதிராக வெளிப்பட்டதால் முருகனுக்கு ‘கதிர் என்றும் ‘கதிரேசன் என்றும் பெயர். கதிராக வெளிப்பட்ட முருகன் வீற்றிருக்கும் தலம் இலங்கையிலுள்ள ‘கதிர்காமம். ‘கதிர்கிராமம் என்று பெயர் இருந்ததாகவும், நாளடைவில் கதிர்காமம் ஆனதாகவும் சொல்வதுண்டு. ‘காமம் என்றால் விருப்பம், ஆசை. தன்னை நாடி வருபவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுபவராக முருகன் இத்தலத்தில் உள்ளார். கந்தசஷ்டி கவசம் ஆசிரியர் தேவராய சுவாமிகள் இப்பெருமானை ‘கதிர்காமத்துறை கதிர்வேல் முருகா என்று போற்றுகிறார்.