திருமாலின் பத்து அவதாரங்களில் சிறப்பித்து சொல்லப்படுவது எது?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07செப் 2015 03:09
தசாவதாரங்களில் பூர்ண அவதாரம் எனப்படுவது கிருஷ்ணாவதாரம். தெய்வாம்சத்தோடு பூலோகம் வந்த கிருஷ்ணர், மனிதர்களோடு தெய்வ நிலையிலேயே கலந்து உறவாடினார். வாழ்வில் அற்புதங்கள் பல புரிந்து, தன்னை நம்பியவர்களைக் காத்தருளினார். துவாபரயுகத்தில் நிகழ்ந்த அவதாரம் என்பதால், அவரோடு கலந்து பழகி மகிழும் பாக்கியம் பலருக்கு கிடைத்திருந்தது. அப்போது, உலகில் நீதி, நேர்மை ஓரளவு பூலோகத்தில் இருந்தது. ஆனால், கலியுகம் தோன்றிய பிறகே தர்மம் குறைந்து அதர்மம் அதிகரிக்கத் தொடங்கியது.