பதிவு செய்த நாள்
08
செப்
2015
11:09
கீழக்கரை: திருப்புல்லாணி ஆதி ஜெகந்நாதப் பெருமாள் கோயிலில் பவித்திர உற்சவம் நேற்று துவங்கியது. திருப்புல்லாணி ஆதிஜெகந்நாதப் பெருமாள் சமேத பத்மாஸனித்தாயார் கோயில் கோயில் 44 வது வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்குகிறது. இக்கோயிலில் பவித்திர உற்சவ விழா நேற்று துவங்கியது. இதையொட்டி, இன்று மாலை 6 மணிக்கு அனுக்ஞை பூஜைகள் ஆரம்பமாகி, செப்.. 9,10,11 ஆகிய 3 தினங்களிலும், அனைத்து சன்னதி களிலும் பவித்திர மாலை சாத்தப் பட்டு விஷேச ஹோமங்கள், ஆராதனைகள் நடைபெறுகிறது. கோயிலில் ஏற்படும் தோஷங்களை நிவர்த்தி செய்யும் பொருட்டு வருடம் ஒருமுறை மட்டுமே இப்பூஜை நடை பெறும். ஏற்பாடுகளை சமஸ்தான, தேவஸ்தான நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர். இக்கோயிலின் அனைத்து கோபுரங்க ளிலும் வர்ணங்கள் பூசப்பட்டு, உபய தாரர்கள் மூலம் திருப்பணிகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. கும்பாபிஷேகம் நடத்த தயார் நிலையில் கோயில் உள்ளது. இதுகுறித்து சிவகங்கை ஸ்ரீனிவாசன் கூறுகையில், ""இக்கோயில் கும்பாபிஷேகத்தை காண ஆவலாக உள்ளோம். கோயில் நிர்வாகத்தினர் இதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும், என்றார்.