பதிவு செய்த நாள்
10
செப்
2015
12:09
நத்தம்: நத்தம் அருகே லிங்கவாடியில் விநாயகர், முத்தாலம்மன் கோயில்களில் கும்பாபிஷேக விழா நடந்தது. செப்., 7 அன்று மங்கள இசை, கணபதிஹோமம், நவக்கிரக ஹோமம், கோ பூஜையுடன் விழா துவங்கியது. மாலை ரக்ஷா பந்தனம், ஆச்சர்ய ஹோமம், முதல்கால யாகசாலை பூஜை நடந்தது. மறுநாள் காலை கணபதி பூஜை, இரண்டாம் கால யாகசாலை பூஜை, மாலையில் மூன்றாம் யாகசாலை பூஜைகள் நடந்தன. நேற்று நான்காம் கால யாகசாலை பூஜை, மஹாபூர்ணாகுதி தீபாராதனை நடந்தது. பின் மூலஸ்தான மகா கும்பாபிஷேகம் நடந்தது. நத்தம் தொகுதி அ.தி.மு.க., செயலாளர் கண்ணன், இளைஞரணி செயலாளர் உத்தமன், ஊராட்சி தலைவர் இளையராஜா உட்பட பலர் பங்கேற்றனர். நத்தம் அருகே ராவுத்தம்பட்டி அழகுநாச்சியம்மன் கோயில், செந்துறை அருகே கோட்டைப்பட்டியில் விநாயகர், மாரியம்மன், முத்தாலம்மன் கோயில்களில் கும்பாபிஷேகம் நடந்தது.
பழநி: பழநி அருகே அக்கரைப்பட்டி வீரமாட்சியம்மன்கோயிலில் மகா கும்பாபிஷேக விழா நடந்தது. விழாவைமுன்னிட்டு 3 நாட்ள் சிறப்பு யாகபூஜைகள் நடந்தது. புனித கலசங்கள் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு வீரமாட்சியம்மன் கும்பத்திற்கு புனிதநீர் அபிஷேகம் செய்து மகா கும்பாபிஷேகம் நடந்தது. புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. அன்னதானம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.