கோவை: ராம்நகர் கோதண்டராமசுவாமி கோவிலில் நேற்று ஆவணி மாத ஏகாதசி உற்சவம் நடந்தது. ஆவணி மாத ஏகாதசி உற்சவம் சிறப்பானது. ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை மாதங்கள் அனைத்தும் விழா நாட்கள், இதில் முதலாவதாக வரும், ஆவணி மாதத்தில் வரும் ஏகாதசி, விசேஷமான ஒன்று. அன்றைய தினம் உற்சவம் நடத்துவது வழக்கம். அதன்படி, நேற்று கோதண்டராமருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன. சிறப்பு அலங்காரத்தில் உற்சவரும், மூலவரும் அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபாடு செய்தனர். ஏகாதசியை யொட்டி, ஆஞ்சநேயரும் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார்.