பதிவு செய்த நாள்
10
செப்
2015
12:09
சிறுவங்கூர்: சிறுவங்கூரில், முத்து மாரியம்மன் கோவில், தேர் திருவிழா நடந்தது. விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி அடுத்த சிறுவங்கூர் காலனியில் முத்து மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவையொட்டி, கடந்த 6 ம் தேதி காப்பு கட்டுதல் நடந்தது. நாள்தோறும் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் வீதியுலா, மாவிளக்கு பூஜை நடந்தது. நேற்று அதிகாலை 4:30 மணிக்கு காத்தவராயன் கழு மரம் ஏறுதல், மோடி எடுத்தல் மற்றும் காத்தவராயன், ஆரியமாலை கருப்பழகி திருக்கல்யாணம் நடந்தது. பகல் 12:00 மணிக்கு காளிக்கேட்டை இடித்தல் நிகழ்ச்சி நடந்தது. பிற்பகல் 2:00 மணியளவில் முத்துமாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து, தேரில் எழுந்தருள செய்து, வடம் பிடித்தனர். ஒன்றிய சேர்மன் ராஜசேகர், அ.தி.மு.க. நகர செயலாளர் பாபு, ஒன்றிய துணை சேர்மன், கண்ணன், ஊராட்சி தலைவர் செல்வராஜ், ஒன்றிய கவுன்சிலர் தமிழரசன், முன்னாள் எம்.எல்.ஏ., சிவராமன் மற்றும் கிராம மக்கள் பலர் பங்கேற்றனர்.