மயிலாடுதுறை: நாகை மாவட்டம் செம்பனார்கோயிலை அடுத்த மாத்தூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் உள்ளது. மிகவும் பழமைவாய்ந்த இந்த கோயிலின் திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டதையடுத்து நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 7 ம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கப்பட்டு நேற்று காலை நான்காம் கால யாகசாலை பூஜைகள் முடிந்து பூர்ணாஹுதி, தீபாராதனை செய்யப்பட்டது.காலை 9.20மணிக்கு யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பட்டுகோயிலை வலம் வந்து விமானத்தை அடைந்தது.9.45மணிக்கு மகாலிங்கம் சிவாச்சாரியார் விமான கலசத்திற்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார்.தொடர்ந்து மகா மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்பாளை தரிசனம் செய்தனர்.