பதிவு செய்த நாள்
12
செப்
2015
11:09
திருத்தணி: ராஜஸ்தான் பகுதியைச் சேர்ந்த நான்கு குடும்பத்தினர், திருத்தணியில் தங்கி, விநாயகர் சதுர்த்திக்காக, பலவகையான விநாயகர் சிலைகளை தயாரித்து வருகின்றனர். நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா, வரும், 17ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதை ஒட்டி, 2 அடி உயரத்தில் இருந்து, 15 அடி உயரம் வரை உள்ள பல வகையான விநாயகர் சிலைகள் தயாரித்து விற்பனை செய்யப்படுகின்றன.திருத்தணி - அரக்கோணம் சாலயில், மகா விஷ்ணுநகர் எதிரில், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த, நான்கு குடும்பத்தினர், ஒரு மாதமாக அப்பகுதியில் குடிசை போட்டு தங்கி, விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். இவர்கள், விஷ்ணு, சிவன், பிரம்மா போன்ற, 10க்கும் மேற்பட்ட வடிவங்களில், விநாயகர் சிலைகளை சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத வகையில், களிமண்ணால் தயாரித்து, அதற்கு வண்ணம் தீட்டி விற்பனை செய்து வருகின்றனர். குறைந்தபட்சம், 1,000 முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை விநாயகர் சிலைகள் விற்கப்படுகின்றன.