வேப்பமரத்தில் பால் வடியும் வினோதம்: கற்பூரம் ஏற்றி வழிபாடு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15செப் 2015 10:09
பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே வேப்பமரத்தில் பால் வடிவதை கிராம மக்கள் ஆச்சரியத்துடன் பார்வையிட்டு செல்வதுடன், கற்பூரம் ஏற்றி வழிபாடு செய்கின்றனர். பெரம்பலூர் அடுத்த, பாளையம் கிராமம், மலையடிவாரத்தில் உள்ள ஒரு வேப்பமரத்தில், நேற்று பால் வடிவதை, அவ்வழியே சென்ற சிலர் பார்த்து கிராம மக்களிடம் தெரிவித்தனர். இத்தகவல் கிராமம் முழுவதும் தீயாக பரவியது. இதைத்தொடர்ந்து வேப்பமரத்தில் அம்மன் ஸ்வாமி குடிகொண்டிருப்பதாக பாவித்து, பொதுமக்கள் அம்மரத்துக்கு பட்டுசேலை சாத்தி தேங்காய், வாழைப்பழம், ஊதுபத்தி உள்ளிட்ட பூஜை பொருட்கள் வைத்து கற்பூரம் ஏற்றி வழிபாடு செய்து செல்கின்றனர். வேப்பமரத்தில் பால் வடியும் நிகழ்வை மக்கள் ஆச்சரியத்துடனும், பக்தியுடனும் கண்டு செல்கின்றனர்.