ராஜபாளையம்: ராஜபாளையம் தர்மாபுரம் மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்றம் சார்பில் விநாயகர் சதுர்த்திக்கு ஐந்து சிலைகள் பெத்தவநல்லூர் மாயூரநாதசுவாமி கோயில் அருகே கிழங்கு மாவால் தயாரிக்கப்பட்டது. அங்கிருந்து நேற்று வடக்கு போலீஸ் ஸ்டேஷன் அருகே தர்மாபுரம் மாப் பிள்ளை விநாயகர் கோயிலுக்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன. கோயிலை சுற்றி சிலைகள் வைக்கப்பட்டு பூஜைகள் நடந்தன. ஏற்பாடுகளை நற்பணி மன்ற தலைவர் ராமராஜூ, நிர்வாகிகள் செய்தனர்.