தஞ்சாவூர் மாவட்டம் திருவலஞ்சுழி வலஞ்சுழிநாதர் கோவிலில் உள்ள சுவேத விநாயகர் என்னும் வெள்ளை பிள்ளையார் 9 அங்குல உயரமே உள்ளவர். இந்த சிலையை கடல் நுரையில் உருவாக்கியுள்ளனர். வலமாக சுழிந்த துதிக்கையை உடைய இவருக்கு பச்சை கற்பூரம் மட்டுமே சாத்துவர். இருப்பிடம்: கும்பகோணம்-தஞ்சாவூர் ரோட்டில் 4 கி.மீ., தொலைபேசி: 0435-245 4421, 245 4026.