ராமேஸ்வரத்தில் திருக்கல்யாண மண்டபம், ஓய்வு கூடம் திறப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16செப் 2015 11:09
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் சார்பில் ரூ.1.66 கோடியில் கட்டப்பட்ட திருக்கல்யாண மண்டபம், பக்தர்கள் ஓய்வு கூடத்தை "வீடியோ கான்பரண்சிங் மூலம் முதல்வர் ஜெ., திறந்து வைத்தார். ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் கோசாலை அருகே ரூ.1 கோடி செலவில் ராம்கோ நிறுவனம் சார்பில் உற்சவர் கல்யாண மண்டபம் கட்டப்பட்டது. பணிகள் நிறைவடைந்து 2 ஆண்டுகளுக்கு மேலாக மூடிக்கிடந்த இம்மண்டபத்தை திறக்க உத்தரவிடக்கோரி, உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் ராமநாதபுரம் இந்து முன்னணி மாவட்ட செயலர் ராமமூர்த்தி வழக்கு தொடர்ந்தார். திருக்கல்யாண மண்டபத்தை திறக்கும்படி கடந்த ஆக., 11ல் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து மண்டபத்தையும், ரூ.66 லட்சத்தில் கட்டப்பட்ட பக்தர்கள் ஓய்வு கூடத்தையும் "வீடியோ கான்பரண்சிங் மூலம் முதல்வர் ஜெயலலிதா நேற்று காலை திறந்து வைத்தார். கலெக்டர் நந்தக்குமார், கோயில் இணை ஆணையர் செல்வராஜ், அறங்காவலர் குமரன் சேதுபதி. கோட்ட பொறியாளர் மயில்வாகனன், நகராட்சி தலைவர் அர்ச்சுணன், வீட்டு வசதி சங்கத்தலைவர் அர்ச்சுணன், நகர் அ.தி.மு.க., செயலர் பெருமாள் உள்பட பலர் பங்கேற்றனர்.