நாமக்கல்: புரட்டாசி முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு, ஆஞ்சநேயர் ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று ஸ்வாமியை வழிபட்டனர். நாமக்கல்லில், பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் ஸ்வாமி கோவில் உள்ளது. நேற்று, புரட்டாசி முதல் ஞாயிற்றுக்கிழமையை யொட்டி, காலை, 10 மணிக்கு, சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. ஆஞ்சநேயர் ஸ்வாமிக்கு பஞ்சாமிர்தம், பால், தயிர், திருமஞ்சனம், சந்தனம், இளநீர் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்தனர். சிறப்பு அலங்காரத்தில், ஸ்வாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள், ஸ்வாமியை வழிபட்டு சென்றனர்.