திருவண்ணாமலையில் கிரிவலம் நேரம் நிர்வாகம் அறிவிப்பு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25செப் 2015 12:09
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், கிரிவலம் வர உகந்த நேரம் குறித்து, கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. திருவண்ணாமலையில், ஒவ்வொரு மாதம் பவுர்ணமியன்று, பல லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று, அண்ணாமலையார், உண்ணாமுலையம்மனை தரிசனம் செய்து வருகின்றனர். அதன்படி இந்த புரட்டாசி மாத பவுர்ணமி வரும், 27ம் தேதி காலை, 11.01.க்கு தொடங்கி, 28ம் தேதி காலை, 8.58மணிக்கு முடிவடைகிறது. இதுவே பக்தர்கள் கிரிவலம் வர உகந்த நேரமாகும் என, கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.