துலாபாரம் என்ற சேர்ச்சை கர்வத்தை அடக்குவதற்காக உருவாக்கப்பட்டது. ஆனால், இது இப்போது தலைகீழாக மாறி விட்டது. இதை உணர்த்தவே, கண்ணன் தராசில் இருந்தபோது வைக்கப்பட்ட தங்கக்கட்டிகள் ஏதும் ஈடு கொடுக்காமல் இருக்க, ஒரு துளசித்தளத்தை பக்தியோடு வைத்ததும் தட்டு தாழ்ந்ததாம். இப்போது தங்கத்தையும், காசையும், பணக்கட்டுகளையும் தராசில் வைக்கிறார்கள். பொதுவாக உப்பு வைப்பதே நலமானது, ஏ மனிதா! உனது உடல் வெறும் 65 கிலோ உப்புக்கு சமமசனது. இதை வைத்துக் கொண்டு என்ன ஆட்டம் போடுகிறாய். உன் ஆணவத்தை கைவிடு. என்பதை உணர்த்துவதற்காக ஆகும்.