சாயல்குடி : சாயல்குடி அருகே காணிக்கூர் பாதாளகாளியம்மன் கோயிலுக்கு பவுர்ணமி தின விளக்கு பூஜை நடந்தது. அம்மனுக்கு பால், நெய், இளநீர்,பஞ்சாமிர்தம் அபிஷேகம் நடந்தது. தங்க கவசத்துடன் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். தொடர்ந்து பக்தர்கள் விளக்கேற்றி அம்மனை வழிபட்டனர். அன்னதானம் நடந்தது. இதுபோன்று பனையூர் அம்மன் கோயிலிலும் விளக்கு பூஜை நடந்தது.