பதிவு செய்த நாள்
30
செப்
2015
11:09
திருத்தணி: அகத்தீஸ்வரர் கோவிலில், 64 பைரவர்களுக்கு, தனித்தனியாக, வரும் 5ம் தேதி யாக சாலை அமைத்து, சிறப்பு பூஜைகள், நடத்தப்பட உள்ளன. இதற்கான விழா, நாளை (அக்.1) கணபதி ஹோமத்துடன் துவங்குகிறது. திருத்தணி அடுத்த, நாபளூர் கிராமத்தில், காமாட்சி அம்பாள் ச÷ மத அகத்தீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆறு ஆண்டுகளாக, உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும், 64 பைரவர்களுக்கு சிறப்பு யாகம் நடத்தப்பட்டு வருகிறது. இந்தாண்டிற்காக, பைரவர்கள் சிறப்பு மகா யாகம், நாளை (அக்.1ம் தேதி) கணபதி ஹோமத்துடன் துவங்குகிறது. இதற்காக கோவில் வளாகத்தில், 64 பைரவர்களுக்கு, தனித்தனியாக யாகசாலை அமைக்கும் பணி, துரித வேகத்தில் நடந்து வருகிறது. வரும் 4ம் ÷ ததி மாலை, சாந்தி ஹோமம், திசா ஹோமம், அஸ்தர ஹோமம் மற்றும் மூலவர் அம்மனுக்கு நவகலச பூஜைகள் நடக்கின்றன. மறுநாள், 5ம் தேதி, ரஷாபந்தனம், யானை, கோமதா, சுவாசினி, வடூக பூஜை, பூம்மச்சாரி பூஜை, தம்பதி பூஜை, சுனவாகன பூஜை (நாய் வைத்து பூஜை) சர்பபூஜை ÷ பான்ற பூஜைகள் காலை 7:00 மணி முதல், மாலை 3:00 மணி வரை நடக்கிறது. தொடர்ந்து, அகத்தீஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன. 64 பைரவர்களுக்கும், 64 சிவாச்சாரியார்கள் பூஜை நடத்துகின்றனர். தொடர்ந்து கலசங்களில் புனிதநீர் மூலவர் காமாட்சி அம்பாள் மற்றும் அகத்தீஸ்வருக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெறும்.