பதிவு செய்த நாள்
30
செப்
2015
10:09
திருச்சி: மலைக்கோட்டை அடிவாரத்தில் உள்ள மாணிக்க விநாயகர் கோவிலில் நடந்து வந்த விநாயகர் சதுர்த்தி உற்சவத்தின், 13ம் நாளான நேற்று மாணிக்க விநாயகர் உற்சவருக்கு, 25 வகையான அபிேஷகம் நடந்தது.
திருச்சி மாணிக்க விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில், விபூதி, 02: சந்தனாதி தைலம், 03: திரவிய பொடி, 04: நெல்லி முள்ளிப்பொடி, 05: மஞ்சள், 06: அரிசி மாவு பொடி, 07: குங்குமம், 08: தேன், 09: நெய், 10: பஞ்சாமிர்தம், 11: பால், 12: தயிர், 13: சாத்துக்குடி, எழுமிச்சை சாறு, 14: பழ வகைகள், 15: கரும்புச்சாறு, 16: அன்னாபிேஷகம், 17: சந்தனம், 18: சொர்ணாபிேஷகம் உள்ளிட்ட 25 வகையான பேரபிேஷகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.