பெருமாளுக்கு தளிகை போடுவதற்காக யாசகம் பெற்ற கிராமப்புற சிறுவர்கள்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05அக் 2015 11:10
திருவெண்ணெய் நல்லூர்: பெருமாளுக்கு தளிகை போடுவதற்காக கிராமப்புற சிறுவர்கள் திருவெண்ணெய்நல்லூர் பகுதியில் யாசகம் பெற்றனர். புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாக இருப்பதால் இந்துக்களில் பலரும், வைணவர்களும் மாதத்தின் நான்கு சனிக்கிழமைகளிலும் பெருமாளுக்கு சிறப்பு வழிபாடு நடத்துகின்றனர். சிலர் வேண்டுதலுக்காக தங்கள் வீட்டு குழந்தைகளின் கைகளில் சொம்புவை கொடுத்து ‘நாராய ணா, கோபாலா’ என கோஷங்கள் கூறி அரிசி உள்ளிட்ட பொருட்களை யாசகம் பெறுகின்றனர். பின், இந்த அரிசியை பொங்கலாக வடித்து பெரு மாளுக்கு தளிகையாக படைக்கின்றனர். இதையொட்டி 3ம் சனிக்கிழமையை முன்னிட்டு, திருவெண்ணெய்நல்லூர் பகுதியில் கிராமப்புற சி றுவர்கள், வீடு, கடைகளில் பெருமாளுக்காக யாசகம் பெற்றனர்.