கள்ளக்குறிச்சியில் திருவாசக முற்றோதல் சிறப்பு மாநாடு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05அக் 2015 11:10
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் சைவ சித்தாந்தப் பேரவையில் திருவாசக முற்றோதல் சிறப்பு மாநாடு நடந்தது. கள்ளக்குறிச்சி சைவ சித்தாந்தப் பேரவை சார்பில் திருவாசக முற்றோதல் சிறப்பு மாநாடு நேற்று முன் தினம் துவங்கியது. தொடர்ந்து நேற்று காலை 6:00 மணிக்கு, கள்ளக்குறிச்சி சி வன் கோவிலிலிருந்து கயிலை வாத்தியங்கள் முழங்க, சிவனடியார்களின் ஆடல், பாடலுடன் தேரோடும் வீதிகளின் வழியாக பேரணி நடந்தது. காலை 9:00 மணிக்கு திருக்கழுக்குன்றம் திருவாசக சித்தர் தாமோதரன் சுவாமிகள் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சியினை நடத்தினார். திருவாசக ராஜம் அம்மாள் முன்னிலை வகித்தார். பொருளாளர் தேவராஜன், செயலாளர் வேலாயுதம், இணை செயலாளர் முத்துசாமி உட்பட ஏராளமான சி வனடியார்கள் பங்கேற்றனர். தொடர்ந்து மாலை 4:00 மணிக்கு திருக்கயிலாயப் பரம்பரை திருவாவடுதுறை ஆதீன அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் திருவாசக நுõலினை வெளியிட்டு பேசினார். முதல் நுõலினை தர்மசிங் பெற்றார். துணை செயலாளர் சந்தானம் நன்றி கூறினார்.