மேட்டுப்பாளையம் ஸ்ரீனிவாசப் பெருமாள் கோவிலில் புரட்டாசி விழா!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05அக் 2015 11:10
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அடுத்த தாசம்பாளையத்தில் அலர்மேல்மங்கை சமேத ஸ்ரீனிவாசப் பெருமாள் கோவில் உள்ளது. இங்கு புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை அடுத்து, காலையில், விஸ்வரூப தரிசனம் பூஜை நடந்தது. தொடர்ந்து மதியம், 12:00 மணி வரை ÷ சவாகாலம், திருமஞ்சனம், தீபாராதனை, சாற்றுமுறை ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. இதில் பங்கேற்ற பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது. மதியம், 12:00 மணிக்கு மூலவர் அலர்மேல் மங்கை சமேத ஸ்ரீனிவாசப்பெருமாளுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. ஸ்ரீதேவி, பூதேவியுடன் உற்சவ மூர்த்தி சீனிவாசப் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகக் கமிட்டியினர் மற்றும் ஜானகிராம அறக்கட்டளை நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.