திருவெண்ணெய்நல்லூர் பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05அக் 2015 11:10
திருவெண்ணெய் நல்லூர்: திருவெண்ணெய்நல்லூர் பெருமாள் கோவிலில் புரட்டாசி சிறப்பு வழிபாடு நடந்தது. திருவெண்ணெய்நல்லூர் ஜனகவல்லிதாயார் சமேத வைகுண்ட வாசகபெருமாள் கோவிலில் புரட்டாசி மாதத்தின் 3ம் சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. காலை 6:00 மணிக்கு விஸ்வரூபதரிசனமும், 7:00 மணிக்கு சிறப்பு திருமஞ்சனமும் நடந்தது. உற்சவருக்கு ஸ்வர்ணகவசம் அணிவிக்கப்பட்டு காலை 10:30 மணிக்கு சிறப்பு பூஜையும், மாலை 6:30 மணிக்கு சகஸ்ரநாம அர்ச்சனையும், இரவு 8:30 மணிக்கு அர்த்தஜாமபூஜையும் நடந்தது. ஏற்பாடுகளை அகோபிலமட நிர்வாகிகள் , பாஸ்கர பட்டாச்சாரியார், சவும்யநாராயணபட்டாச்சாரியார் ஆகியோர் செய்திருந்தனர்.