Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அதியமான்கோட்டை காலபைரவர் கோவிலில் ... ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் ஓவியங்கள் புதுப்பிக்க பக்தர்கள் வலியுறுத்தல்! ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆத்தூரில் பாழடைந்த நிலையில் பழமையான விசாலாட்சி கோயில்!
எழுத்தின் அளவு:
ஆத்தூரில் பாழடைந்த நிலையில் பழமையான விசாலாட்சி கோயில்!

பதிவு செய்த நாள்

06 அக்
2015
11:10

ஆத்தூர்: ஆத்தூரில் பாழடைந்த நிலையில் உள்ள காசி விசாலாட்சி விஸ்வநாதர் கோயிலை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆத்தூரில் 900 ஆண்டுகள் பழமை வாய்ந்த காசி விசாலாட்சி விஸ்வநாதர் கோயில் உள்ளது. இந்து சமய அறநிலைய துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோயிலில் விசாலாட்சி, விசுவநாதருக்கு தனித்தனியாக கருவறைகள் உள்ளன. தொடர்ந்து பராமரிப்பு இல்லாததால் இவை மிகவும் சேதமடைந்துள்ளன. சில ஆண்டுகளுக்கு முன் கருவறை கோபுரங்களை மட்டும் சீரமைக்க அறநிலைய துறை திட்டமிட்டது. இதற்காக பாலாலய பூஜையும் நடந்தது. மக்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது. கருவறைகள் முற்றிலும் சேதமடைந்துள்ள நிலையில் கோபுரங்களை சீரமைப்பதால் பயனில்லை. கருவறையை சீரமைத்த பின்பே கோபுரங்களை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர். இதையடுத்து நிறுத்தப்பட்ட சீரமைப்பு பணிகள் பல ஆண்டுகளாகியும் தொடரப்படவில்லை. பொதுவாக பாலாலய பூஜைகள் முடிந்ததும் ஆறு மாத காலத்திற்குள் திருப்பணிகள் முடிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும் என்பது ஐதீகம். ஆனால் பல ஆண்டுகளாகியும் திருப்பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதால், அறநிலைய துறை செயல்பாடுகள் பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கருவறைகள் மற்றும் கோபுரங்களை சீரமைப்பதற்கு நிதியுதவி மற்றும் நன்கொடை வழங்க பலரும் தயாராக உள்ளனர். ஆயினும் அறநிலைய துறை இதற்கு அனுமதிக்கவில்லை. எனவே, பொதுமக்கள் பங்கேற்பு மற்றும் நிதியுதவியையும் பெற்று திருப்பணிகளை முடித்து கும்பாபிஷேகம் நடத்த அறநிலைய துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: சித்திரை திருவிழாவில் கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளியதை தொடர்ந்து அழகரைகுளிர்விக்கும் ... மேலும்
 
temple news
மானாமதுரை: மானாமதுரை வீர அழகர் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான வீர அழகர் வைகை ... மேலும்
 
temple news
பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் பெருமாள் ... மேலும்
 
temple news
பட்டிவீரன்பட்டி; சித்தரேவு வரதராஜபெருமாள் கோவில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம் ஏப்.20ல் நடந்தது. ... மேலும்
 
temple news
தேனி; போடிநாயக்கனூர் கொட்டகுடி ஆற்றில் ஸ்ரீரங்கம் வைணவ முறைப்படி செவ்வாய்க்கிழமை தமிழ் புத்தாண்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar