பதிவு செய்த நாள்
06
அக்
2015
11:10
கருமத்தம்பட்டி: கருமத்தம்பட்டி புனித ஜெபமாலை சர்ச்சில், நடந்த தேர்த்திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். கருமத்தம்பட்டியில் உள்ள புனித ஜெபமாலை மாதா சர்ச் பிரசித்திபெற்றது. இங்கு ஆண்டுதோறும், 10 நாட்கள் தேர்த்திருவிழா நிகழ்ச்சிகள் நடக்கின்றன. கடந்த, 25ம்தேதி கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கியது. தொடர்ந்து சிறப்பு ஆராதனைகள், கூட்டுபாடற்பலி, மறையுரைகள் நடந்தன. அக்., 2ல் கோவை மறை மாவட்ட ஆயர் தாமஸ் அக்குவினாஸ் தலைமையில், சிறப்பு கூட்டு பாடற்பலி பூஜை நடந்தது. கடந்த, 3ம்தேதி மாலை சிறு தேர் பவனியும், நேற்று முன்தினம் இரவு 7.30 மணிக்கு மாதா தேர் பவனியும் நடந்தது. இதில், பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த பக்தர்கள் குடும்பத்துடன் பங்கேற்றனர். பல பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. திருவிழா ஏற்பாடுகளை பங்கு தந்தை ஜெரோம் தலைமையில், விழாக்குழுவினர் செய்திருந்தனர்.