பிறந்தநாளை தேதி அடிப்படையில் கொண்டாடுவது வெளிநாட்டு மரபு. நாம், ஜென்ம நட்சத்திரத்தின் அடிப்படையில் பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்கள். அப்போது, ஒவ்வொரு ஆண்டும் கிழமைகள் மாறுபடும். அவ்வாறு மாறுபடும் கிழமைகளுக்கு ஏற்ப, அந்த ஆண்டிற்குரிய பலன்கள் அமையும் என்கிறது முகூர்த்த சிந்தாமணி என்ற நூல்.
ஞாயிறு - அவ்வப்போது நீண்ட தூர பயணம். திங்கள் - விருந்து சாப்பாடு கிடைத்தல் செவ்வாய் - சுறுசுறுப்பு குறைதல் புதன் - கல்வி அபிவிருத்தி வியாழன் - நல்ல ஆடைகள் கிடைத்தல் வெள்ளி - பெண்களின் ஆதரவு சனி - தைரியக்குறைவு
சனிக்கிழமை ஜென்மநட்சத்திரம் வந்தால், சனி ஜென்ம நட்சத்திர சாந்தி செய்து கொள்ள வேண்டும். குறைந்த பட்சம் சனீஸ்வரருக்கு எள் எண்ணெய் தீபம் ஏற்றி வரலாம்.