Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலை பயணத்துக்கு பாதுகாப்பு ... கோவில்களுக்கு பூஜை பொருட்கள் வழங்கல்! கோவில்களுக்கு பூஜை பொருட்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கொலு பொம்மைகள் வாங்க வியாபாரிகள் படையெடுப்பு!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கொலு பொம்மைகள் வாங்க வியாபாரிகள் படையெடுப்பு!

பதிவு செய்த நாள்

09 அக்
2015
11:10

விருத்தாசலம்: நவராத்திரி பண்டிகைக்கு கொலு பொம்மைகள் வாங்க, வெளிமாநில வியாபாரிகள் விருத்தாசலம் செராமிக் தொழிற்பேட்டைக்குப் படையெடுத்து வருகின்றனர். நவராத்திரி விழாவில் துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி ஆகிய பெண் தெய்வங்களை வீட்டில் கொலு வைத்து 9 நாட்கள் சிறப்பாக வழிபடுவர். தமிழ்நாடு, குஜராத், பஞ்சாப், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் வரும் 13ம் தேதி முதல் நவராத்திரி திருவிழா துவங்குகிறது. இதற்காக விருத்தாசலம் செராமிக் தொழிற்பேட்டையில் உள்ள 200க்கும் மேற்பட்ட தொழிற்கூடங்களில் கடந்த இரண்டு மாதங்களாக நவராத்திரி கொலு பொம்மைகள் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடக்கின்றன. அதில், யானை, பஞ்சமுக விநாயகர், வல்லப கணபதி, 20 குபேரன் பொம்மைகள் கொண்ட செட், தசவதாரம் செட், சத்தியநாராயண செட், அஷ்டலட்சுமி, ராமர் பட்டாபிஷேகம், கல்யாண செட், பொய்க்கால் குதிரை, காமதேனு, காய்த்திரி, மீனாட்சி சுந்தரேசர், ராதை கண்ணன், லட்சுமி நரசிம்மர், ஹயக்கிரீவர், இலைவடிவ விநாயகர் உட்பட 90க்கும் மேற்பட்ட வகைகள் கொண்ட கொலு பொம்மைகள் உற்பத்தி செய்து, அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இதில், பண மூட்டைகளுடன் மாட்டு வண்டியில் குபேரன் வருவது, சமயபுரம் மாரியம்மன் பொம்மைகள் இந்தாண்டு புதிய வரவாகும். 10 ரூபாய் முதல் 1,000 ரூபாய் வரை செராமிக் பொம்மைகள் கிடைக்கின்றன.  கொலு பொம்மைகளை வாங்குவதற்காக தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் விருத்தாசலத்திற்குப் படையெடுத்து வருகின்றனர். பொது மக்களும் ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் உப கோயிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் இன்று (அக்.11ல்) நவராத்திரி ... மேலும்
 
temple news
சென்னை: சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள ஜலகண்டீஸ்வரர் கோயிலில் பிரதமர் மோடி - முதல்வர் விஜய் சுவாமி தரிசனம் ... மேலும்
 
temple news
ராமநாதபுரம்: பகவத் கீதை உலக நன்மையையும், மனித வாழ்வுக்கான வழிமுறைகளையும் எடுத்துக் கூறுகிறது. ... மேலும்
 
temple news
தூத்துக்குடி: குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் இன்று ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், கொளுத்தும் வெயிலிலும் பல்லாயிரக்கணக்கில் திரண்ட பக்தர்கள், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar