கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் மண்டலாபிஷேகம் பூர்த்தி விழா!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12அக் 2015 10:10
பண்ருட்டி: பண்ருட்டி கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் உள்ள அஷ்டபுஜ துர்க்கை அம்மன் கோவிலின் மண்டலாபிஷேக பூர்த்தி விழா நடந்தது. விழாவையொட்டி துர்கை அம்மன், தன்வந்திரி பெருமாள் கோவிலில் மாலை 4:30மணிக்கு கலச ஸ்தாபனம், ஆவாஹனம், ஹாமம், பூர்ணாகுதி, அபிஷேகம் முடிந்து, 6:00 மணிக்கு தீபாராதனை நடந்தது. மூலவர் துர்க்கையம்மன், ஸ்ரீதன்வந்திரி பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். விழா ஏற்பாடுகளைஆர்ய வைஸ்ய சமூகத்தினர் செய்திருந்தனர்.