பதிவு செய்த நாள்
12
அக்
2015
10:10
திருப்பூர்: காந்தி நகர், ஷீரடி ஸ்ரீசாய்பாபா கோவிலில், 1,008 சங்காபிஷேக பூஜை நேற்று நடந்தது. திருப்பூர், காந்தி நகர் ஷீரடி சாய்பாபா கோவிலில், ஆறாம் ஆண்டு துவக்க விழா நேற்று நடந்தது. அதிகாலை, 5:00க்கு, மஞ்சள் பிள்ளையார் வழிபாடு, 5:30க்கு கலச ஸ்தாபனம் மற்றும், 1,008 சங்கு ஸ்தாபனம் நடந்தது. காலை, 6:30க்கு, 150 திரவியம் மூலம் யாகம் நடைபெற்றது. பக்தர்கள், திரவியம், மூலிகைகளை யாக குண்டத்தில் இட்டு, வழிபட்டனர். காலை, 7:00க்கு, மகா வேள்வி, தீபாராதனை நடந்தது. பின், பாபாவுக்கு யாக ஸ்தாபன கலசம், 1,008 சங்கு தீர்த்தங்கள் மூலம் மகா அபிஷேகம் நடந்தது. பகல், 11:30க்கு, சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், பூஜை, மகா தீபாராதனை மற்றும் அன்னதானம் நடந்தது. சிறப்பு வழிபாடு, 108 அஷ்டோத்ர நாமாவளி பூஜைகள் நடந்தன. இதில், நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். யாக பூஜையில் பங்கேற்றவர்களுக்கு, தன்வந்திரி மகா யந்திரம், ஆஞ்சநேயர் மகா யந்திரம், பிரசாதம் வழங்கப்பட்டது.