பதிவு செய்த நாள்
25
ஜூலை
2011
12:07
காரிமங்கலம்: காரிமங்கலம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள முருகன் கோவில்களில், இன்று (ஜூலை 25) ஆடி கிருத்திகை விழா நடக்கிறது. காரிமங்கலம் மந்தைவீதி ராஜகணபதி முருகன் கோவிலில், ஆடி கிருத்திகையை முன்னிட்டு, ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடக்கிறது. ஏற்பாடுகளை, குருக்கள் பாலசுப்பிரமணியன் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர். காரிமங்கலம் மலைக்கோவிலில் உள்ள வள்ளி தெய்வாணை சமேத சுப்பிரமணிய ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடக்கிறது. மொரசுப்பட்டி முருகன் கோவில், சென்னம்பட்டி முருகன் கோவிலில் ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடக்கிறது. தர்மபுரி, குமாரசாமிபேட்டை சிவசுப்பிரமணிய ஸ்வாமி கோவிலில் காலையில் ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், வெள்ளி கவசம் சாத்துதலும், மாலையில் ஸ்வாமி திருவீதி உலா நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் செங்குந்த மரபினர் செய்துள்ளனர். தர்மபுரி, நெசவாளர் காலனி சக்தி விநாயகர் வேல்முருகன் கோவிலில் ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மாலையில் சந்தனக்காப்பு அலங்காரம், ஸ்வாமி திருவீதி உலா நடக்கிறது. ஏற்பாடுகளை குருக்கள் சிவானந்தம் மற்றும் செங்குந்த மரபினர் செய்துள்ளனர்.