பதிவு செய்த நாள்
14
அக்
2015
04:10
விருத்தாசலம்: கடலுார் மாவட்டம், விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் நவராத்திரி சிறப்பு வழிபாடு 13.10.15 முன்தினம் துவங்கியது.
துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய சுவாமிகளை கொலு வைத்து 9 நாட்கள் வழிபடும் கொலு நோன்பு துவங்கியது. அதன்படி, விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில், விருத்தாம்பிகை பாலாம்பிகை சுவாமிகளுக்கு 13.10.15 முன்தினம் இரவு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது.
விருத்தாம்பிகை சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். தொடர்ந்து, விருத்தாம்பிகை சன்னதியில் 9 படிகள் அமைத்து, அதில், விநாயகர், தசவதாரம், அஷ்டலட்சுமி, ராமர் – லட்சுமணர், பெருமாள், கண்ணன், கோபியர் கண்ணன், துர்கை, லட்சுமி, சரஸ்வதி மற்றும் பறவைகள், விலங்குகள், இயற்கை காட்சிகள் உட்பட 100க்கும் மேற்பட்ட பொம்மைகள் வைத்து, கொலு வைக்கப்பட்டது. இதில், ஏராளமானோர் வழிபட்டனர். மேலும், அம்மன் மூன்று நாட்கள் துர்கா, மூன்று நாட்கள் லட்சுமி, மூன்று நாட்கள் சரஸ்வதி அலங்காரத்திலும் அருள்பாலிக்கிறார்.