பண்ருட்டி: கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த கொக்குப்பாளையம் ஸ்ரீபிரத்தியங்கராதேவி கோவிலில் அமாவாசையை முன்னிட்டு உலக நன்மை வேண்டி நிகும்பலா யாகம் நடந்தது.
அமாவாசையை முன்னிட்டு 13.10.15 முன்தினம் நடந்த யாகத்தையொட்டி, மாலை மணிக்கு மூலவர் பிரத்தியங்கராதேவிக்கு சிறப்பு பூஜை, நவக்கிரக பூஜை நடந்தன. இரவு உலக நன்மை வேண்டி நிகும்பலா யாகத்தில் வற்றல் மிளகாய் கொட்டி யாகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.