மந்தை மாரியம்மன் கோயில் விழாவில் நடந்த குழிமாற்று நிகழ்ச்சி!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17அக் 2015 11:10
விருதுநகர்: விருதுநகர் அருகே கொத்தனேரியில் மந்தை மாரியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் திருவிழாவினை முன்னிட்டு குழிமாற்று நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.விருதுநகர் அருகே கொத்தனேரி மந்தை மாரியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் திருவிழா கடந்த 6ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. நேர்த்திக்கடன்: முக்கிய நிகழ்வாக முத்தாலம்மன் சிலை செய்து மந்தையில் சிறப்பு பூஜைக்குப் பின் பள்ளத்தில் படுத்துக்கிடக்கும் பக்தர்களை சிலையுடன் பூஜாரி தாண்டி செல்லும் குழி மாற்றும் நிகழ்ச்சி நடக்கும். தற்போது அதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், அதற்குப்பதிலாக நேற்றுமுன்தினம் இரவு தரையில் வேப்பிலை விரித்து மஞ்சள் துணியால் மூடி குழந்தைகள், பெரியவர்கள் என 25க்கும் மேற்பட்ட பக்தர்கள் படுத்திருந்தனர். அவர்களை தாண்டி பூஜாரி, அம்மன் சிலையை சுமந்து சென்று கண்மாயில் கரைத்தார். தொடர்ந்து முளைப்பாரியும் கரைக்கப்பட்டது. நேற்று வீரிய காரியம்மனுக்கு பொங்கல் வழிபாடு நடந்தது.