திண்டுக்கல்: திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயிலில் நவராத்திரி விழா நடந்து வருகிறது. வருடந்தோறும் நவராத்திரி விழாவையொட்டி 6ம் நாள் விழாவில் ஸ்ரீ துர்கா, ஸ்ரீ லட்சுமி, ஸ்ரீ சரஸ்வதி அம்பிகையின் பேரருளைப் பெற்று மக்கள் சுகானந்த வாழ்வு அடைய வேண்டி நவசண்டி ஹோமம் நடந்தது. காலையில் சிறப்பு அபிஷேக ஆராதனையும், பூஜையும், இரவில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அனுக்ஞை, மஹா சங்கல்பம் நாவாரண பூஜை, பைரவர், யோகினி பூஜையும் தீபாராதனையும் நடந்தது.