பதிவு செய்த நாள்
19
அக்
2015
11:10
விருத்தாசலம்: விருத்தாசலம் வரதராஜபெருமாள் கோவிலில் இருந்து துவங்கிய பன்னிரு கருட சேவை வீதியுலாவை, கலெக்டர் சுரேஷ்குமார் துவக்கி வைத்தார். கடலூர் மாவட்டம், விருத்தாசலம், சாத்துக்கூடல் ரோடு ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜப்பெருமாள் கோவிலில் 17ம் ஆண்டு கருட சேவை விழா, நேற்று முன்தினம் துவங்கியது. இதையொட்டி, பெருமாள், தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம், சிறப்பு அலங்காரம் நடந்தது. தொடர்ந்து, நேற்று முன்தினம் காலை முதல் விருத்தாசலம், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த பெருமாள் கோவில்களில் இருந்து உற்சவ மூ ர்த்திகள் வரதராஜ பெருமாள் கோவிலில் எழுந்தருளினர். காலை 8:00 மணிக்கு வாசவி மகாலில் வைணவ மாநாடு நடந்தது. இரவு 7:30 மணிக்கு க ருட சேவை வீதியுலாவை கலெக்டர் சுரேஷ்குமார் துவக்கி வைத்தார். ஒன்றிய சேர்மன் சுந்தரராஜன், ஜெயின் ஜூவல்லரி உரிமையாளர் அகர்சந்த், பிராமணர் சங்க மாநில நிர்வாகி அருணாசலம் உட்பட பலர் பங்கேற்றனர். அதில், விருத்தாசலம் ராஜகோபால சுவாமி, கோமங்கலம், ரெட்டிக்குப் பம், வண்ணாங்குடிகாடு, எலவனாசூர்கோட்டை, கோ.பவழங்குடி, பெ.பூவனுார் உட்பட 25 கோவில்களைச் சேர்ந்த பெருமாள் சமேத கோலத்தில் நகர வீதிகளில் உலா வந்து அருள்பாலித்தனர். முன்னதாக, வரதராஜ பெருமாள் கோவிலில் கலெக்டர் சுரேஷ்குமார், குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தார்.