1. முருகப் பெருமானின் அறுபடை வீடுகளுள் மூன்றாவது படை வீடாகத் திகழ்வது பழனி, ஞானப்பழம் தனக்கு கிடைக்காத கோபத்தில், ஆண்டியாய் இங்கு வந்து தங்கினார் முருகப்பெருமான். அதனால் அவரை இங்கு ஆண்டிக் கோலத்தில் தண்டாயுதபாணியாக காண முடிகிறது.
2. மூலஸ்தானத்தில் உள்ள பழனியாண்டவர் திருமேனி போகர் சித்தரால், நவபாஷாணத்தால் உருவாக்கப்பட்டதாகும். இதனால், மூலவர் மீது அபிஷேகம் செய்யப்படும் பொருள்கள் எல்லா நோய்களையும் குணப்படுத்தும் வல்லமையே பெறுகின்றன.
3. பழனி என்பது அங்குள்ள மலையின் பெயராகும். பழனி மலையையும் மலையடிவாரத்தில் உள்ள திருவாவினன் குடி தலத்தையும் உள்ளிட்ட நகரமே பழனி. இந்த தலம் பழனி என அழைக்கப்படுவதற்கு காரணமும் உள்ளது.
4. சிவனும், பார்வதியும் தம் இளைய மைந்தனான முருகப் பெருமானை ஞானப்பழம் நீ என அழைத்ததால் பழம் நீ என வழங்கப்பெற்று. அதுவே பின்னர் பழனி என மருவி விட்டது.