பதிவு செய்த நாள்
20
அக்
2015
10:10
தாடிக்கொம்பு: திண்டுக்கல் தாடிக்கொம்பு அகரம் முத்தாலம்மன் கோயில் கண் திறப்பு விழா கோலாகலமாக நடந்தது. திண்டுக்கல் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற அகரம் முத்தாலம்மன் கோயில் திருவிழாவை காண மாவட்டம் முழுவதும் இருந்து பக்தர்கள் திரண்டனர். அக்.,11ம் தேதி சாமி சாட்டுதலுடன் தொடங்கிய விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கண் திறப்பு நேற்று காலை நடந்தது. தீச்சட்டி எடுத்தும் மாவிளக்கு எடுத்தும், கரும்பில் தொட்டில் கட்டி தங்கள் குழந்தைகளை சுமந்தபடியும் நேர்த்திக் கடன் செய்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் பரம்பரை நிர்வாக அறங்காவலர் மாரிமுத்து, பேரூராட்சி அ.தி.மு.க., செயலாளர் சக்திவேல், பேரூராட்சி தலைவர் தமிழரசி, தாடிக்கொம்பு அ.தி.மு.க செயலாளர் முத்துராஜ், கூட்டுறவு கடன் சங்கதலைவர் முத்தையா, பேரூராட்சி தலைவர் அன்புசெல்வி, கவுன்சிலர்கள் அம்மாவாசி, செயல் அலுவலர் பால்ராஜ், தாடிக்கொம்பு செயல் அலுவலர் சீனிவாசராகவன், அருணா, சேம்பர் மணிகண்டன், பி.ஆர்.டி கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் ராஜாத்தேவர், முத்துக்கிளி, தொழிலதிபர் மூர்த்தி, அய்யப்பன், நிலக்கடலை பருப்பு வியாபாரிகள் சங்க தலைவர் சண்முகவேல், செல்வி சேம்பர் உரிமையாளர் ரத்தினம், போர்வெல் உரிமையாளர் நாட்ராயன், சுரபி கல்லூரி தாளாளர் ஜோதிமுருகன், ஸ்ரீ கோடீஸ்வர பிராப்பர்ட்டி டெவலப்பர்ஸ் நிர்வாகிகள் ஸ்ரீதர், குமரேசன், காமாட்சி டிரேட்டர்ஸ் உரிமையாளர் செல்வகுமார், எஸ்.கே.சி உரிமையாளர் குப்புசாமி, வி.எம்.ஏ சர்விஸ் சென்டர் ராமமூர்த்தி, சரவணா ஆயில் ஸ்டோர் செல்வராஜ், அழகுசமுத்திரப்பட்டி தொழிலதிபர் பெரியசாமி, நியூ இந்துஸ்தான் ஸ்டில் உரிமையாளர் நடராஜன் செய்திருந்தனர்.