பதிவு செய்த நாள்
20
அக்
2015
11:10
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில், கடைசி புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பொள்ளாச்சி சிங்காநல்லுார் ஸ்ரீ கரிவரதராஜப்பெருமாள் கோவிலில், கடைசி புரட்டாசி சனிக்கிழமையையொட்டி, சிறப்பு பூஜைகளும், ஊஞ்சல் உற்சவமும் நடந்தன. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். பொள்ளாச்சி கரிவரதராஜப்பெருமாள் கோவில், லட்சுமி நரசிம்மப் பெருமாள் கோவில் மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில், புரட்டாசி சனிக்கிழமையையொட்டி, சிறப்பு பூஜைகள் நடந்தன. மேலும், பக்தர்கள் விரதமிருந்து, இறைவனுக்கு அவல், கரும்புச் சர்க்கரை, துருவிய தேங்காய் மற்றும் வாழைப்பழம் படைத்து வழிபாடு செய்தனர்.