பதிவு செய்த நாள்
20
அக்
2015
11:10
பொள்ளாச்சி: பொள்ளாச்சி செடிமுத்துார் முத்து விநாயகர், முத்து மாகாளி அம்மன், ஸ்ரீதேவி, பூதேவி உடனமர் முத்து வரதராஜ பெருமாள் கோவிலில், கும்பாபிேஷக விழா வரும் 25ம் தேதி நடக்கிறது.விழாவையொட்டி, வரும் 24ம் தேதி மாலை, 5:00 மணிக்கு திருவிளக்கு வழிபாடு, மூத்த பிள்ளையார் வழிபாடு, முளைப்பாலிகை வழிபாடு, அடியார்கள் காப்பு அணிதல் நிகழ்ச்சியும் நடக்கிறது. அன்று மாலை, 6:00 மணிக்கு திருக் குடங்களில் எழுந்தருளச் செய்தல், திருக்குடங்கள் வேள்வி சாலைக்கு புறப்பாடு, வாயிற்காவலர் வழிபாடு; இரவு, 8:00 மணிக்கு 108 வகையான மூலிகை பொருட்கள் ஆகுதி, திருநீற்று பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சியும் இடம்பெறுகின்றன. வரும் 25ம் தேதி காலை, 7:00 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, காலை, 7:30 மணிக்கு 108 வகையான மூலிகை பொருட்கள் ஆகுதி அருள்நிலை ஏற்றல், காலை, 8:00 மணிக்கு திருக்குடங்கள் திரு உலா, காலை, 8:30 மணிக்கு விமான கலசங்களுக்கு கும்பாபிேஷகம், காலை, 9:30 மணிக்கு பெருந்திருமஞ்சனம், அலங்கார பூஜை, காலை, 10:00 மணிக்கு அன்னதான நிகழ்ச்சியும் நடக்கிறது.