சாயல்குடி: சாயல்குடி அருகே சேதுராஜபுரம் செல்வ விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. விநாயகருக்கு பால், நெய், சந்தனம், அருகம்புல், இளநீர் அபிஷேகம் செய்யப்பட்டது. காலை 9.30 மணிக்கு கோயில் கலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டது. முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினர் முருகன், ஊராட்சித் தலைவர் கொலுசம்மாள், செவல்பட்டி வேளாண் கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் பால்பாண்டி பங்கேற்றனர்.