பதிவு செய்த நாள்
23
அக்
2015
11:10
மாமல்லபுரம்: மாமல்லபுரம் பூதத்தாழ்வாருக்கு, பக்தர்கள் திருக்குடை அளித்தனர். மாமல்லபுரம், ஸ்தலசயன பெருமாள் கோவிலில், பூதத்தாழ்வார் அவதார உற்சவம், கடந்த 13ம் தேதி துவங்கி, தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதை முன்னிட்டு, கோயம்புத்துார் பாகவத பக்த பஜனை சபா குழு பக்தர்கள், 14 சாண் அளவு கொண்ட இரு திருக்குடைகளை, நேற்று முன்தினம் கோவிலில் வழங்கினர். மாடவீதிகளில் அவற்றை கொண்டு சென்று, மாலை, 5:00 மணிக்கு, கோவிலில் அளித்து சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.