திருவெண்ணெய் நல்லூர்: திருவெண்ணெய் நல்லூர் அருகே ஜீவநதி அமைப்பு சார்பில் மழைவேண்டி, வருணபூஜை நடந்தது. விழுப்புரம் அடுத்த அரசூரில் ஜீவநதி அமைப்பின் சார்பில் மழை வேண்டி, நேற்று காலை 10:00 மணிக்கு வருணபூஜை நடந்தது. அமைப்பின் தலைவர் தட்சணாமூர்த்தி தலைமையில் மலட்டாற்றில் யாகசாலைகள் அமைத்து சிவாச் சாரியார்கள் பூஜைகளை நடத்தினர். காலை 10:35 மணிக்கு பூர்ணாஹூதி நடத்தப் பட்டு, ஆற்றில் கலசநீர் ஊற்றப்பட்டது. இதில் 66 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மழை வேண்டி வருணபகவானை பி ரார்த்தனை செய்தனர்.